துன்பங்கள் நீக்கும் துர்கை அம்மன்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்..
துர்கை என்றாலே துன்பங்களை நீக்குபவள் என்று அர்த்தம். துர்கா தேவி அம்மனை வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் துன்பங்களை நீக்குபவர் என்று சொல்லுவார்கள்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கா தேவி அம்மனை வழிபாடு செய்து வந்தால், ராகுவின் பிடியில் சிக்கி கொள்ளாமல் இருக்கலாம். துர்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபடுவது இன்னும் சிறப்பு மிக்கது.
வெள்ளிக்கிழமை அன்று துர்கை அம்மன் கோவிலுக்கு சென்று எலும்பிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பிடித்த நோய்கள் நீங்கி விடும்.
தீபம் ஏற்றி வழிபடுவது மட்டுமின்றி மல்லிகை பூ, அல்லது சாமந்தி பூ மட்டும் வாங்கி அம்மன் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பின்னரே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின் கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும்.
பின் கோவிலில் அமர்ந்து மனதார அம்மனை நினைத்து வேண்டுதல் வைக்க வேண்டும். வேண்டுதல் வைத்த பின் கோவிலில் அமர்ந்து 20 நிமிடம் துர்க்கை அம்மன் பாடல் கேட்க வேண்டும். 20 நிமிடம் முடிந்த பின் வீட்டிற்கு கிளம்பி விட வேண்டும்.
வழியில் யாருக்கும் தர்ப்பணம் செய்யக்கூடாது. அப்படி செய்யாமல் இருந்தால் மட்டுமே ராகுவால் உண்டான் பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக நவக்கிரகத்தை சுற்றக்கூடாது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post