சென்னை தனியார் பள்ளியில் வாயுக்கசிவு..! கசிவிற்கான காரணம்..!! அதிர்ச்சியில் பெற்றோர்..!!
சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள VICTORY தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளியில் கடந்த அக்டோபர் 25ம் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டு மாணவிகளை உடனடியாக வெளியேற்றம் செய்யும் நிலையில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.. ஆனால் அதில் 3வது தளத்தில் இருந்த மாணவ, மாணவிகள் மட்டும் சீக்கிரம் வெளியேற முடியாமல் தவித்த நிலையில் 35 மாணவ மாணவிகள் மயங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இந்நிலையில் மீண்டும் இன்று அப்பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.. இதில் 3 மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இந்த வாயுக்கசிவிற்கான காரணம் என்னவென்று விசாரித்த போது., பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் (Chemistry Lab) இருந்து வாயு கசிந்ததாக தெரியவந்தது..
மற்றொரு பக்கம் பள்ளி கேட் வாசல் அருகேயுள்ள ட்ரைனேஜில் இருந்து துருநாற்றம் வீசுவதாகவும்., இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் சொன்ன போது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது..
மேலும் பள்ளி நிர்வாகத்தோடு பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. வாயுகசிவிற்கு சரியான காரணம் வெளியாகத்தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..