இந்தியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலியின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தியா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவராக முன்னால் இந்தியா வீரர் ரோஜர் பின்னி . தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
இந்திய அணி கங்குலியின் நிர்வாக தலைமையில் சிறப்பாக விளையாடிவந்துள்ளது. இன்றுடன் அவருடைய பதவி காலம் நிறைவடையும் நிலையில் அவருக்கு அடுத்ததாத முன்னால் இந்தியா வீரர் ரோஜர் பின்னி BCCI தலைவராகியுள்ளார். இதனையடுத்து கங்குலி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், ” புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட ரோஜர் பின்னிக்கு வாழ்த்துக்கள், புதிய நிர்வாகம் அணியை முன்னேற்றி செல்லுவார்கள் இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
BCCI தலைவர் ரோஜர் பின்னி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ” நான் முக்கியமாக இரண்டு விஷயத்தில் கவனம் செலுத்த உள்ளேன், முதலில் வீரர்களின் உடற்நிலையில் கவனம் செலுத்த பட வேண்டும். உலக கோப்பைக்கு முன்னால் பும்ரா காயம் காரணமாக வெளியேறியதால் மொத்த திட்டமும் பாதிக்கப்பட்டது. இரண்டாவதாக நம் நாட்டில் உள்ள மைதானத்தின் தன்மையை ஆராயவுள்ளேன்” என்று அவர் கூறினார்.