“இல்லத்தில் விநாயகர் திரையில் கோட்..” இணையத்தில் வைரலாகும் போஸ்ட்..!!
இன்று உலகம் முழுவதும் கோட் திரைபடம் வெளியானது., படத்தின் முதல் நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக கள்ளகுறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவியரும் தளபதியின் ரசிகருமான “செல்வம்” விநாயகர் சிலையை வைத்து கோட் படத்தில் வரும் நடிகர் விஜயை வடிவமைத்துள்ளார்..
இளைய தளபதி விஜய் நடிப்பில்., இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள கோட் திரைபடம் பல எதிர்ப்புகளை தாண்டி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது..,
இன்று முதல்நாள் முதல் காட்சியானது தமிழ்நாட்டில் காலை 9மணிக்கு வெளியிடப்பட்டது., இன்று காலையிலேயே படம் ரிலிசை கொண்டாடும் விதமாக அவர்களது ரசிகர்கள் இலவச உணவு., மகளிருக்கு இலவச டிக்கெட் கொடுத்து அசத்தியுள்ளனர்..
அதையும் தாண்டி மற்றொரு ரசிகர் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.. கள்ளகுறிச்சி மாவட்டம் மணலூரை சேர்ந்த ஓவியரும் தளபதியின் ரசிகருமான “செல்வம்” விநாயகர் சிலையை வைத்து கோட் படத்தில் வரும் நடிகர் விஜயை வடிவமைத்துள்ளார்..
இதுகுறித்து அவர் கூறுவதாவது “இல்லத்தில் விநாயகர் திரையில் கோட்” என்பதை சொல்லும் விதமாக இந்த ஓவியத்தை வரைந்ததாகவும்., “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” (GOAT) படம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் வரைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. 5 நிமிடத்தில் இந்த புகைப்படம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..