ஜி7 உச்சி மாநாடு..! ஃபுயூமோ கிசிடாவை சந்தித்த மோடி..!
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுயூமோ கிசிடாவை சந்தித்து பேசினார்.
மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே வலுவான உறவு, இரு நாடுகளின் பாதுகாப்பு, தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார இணைப்புகளில் ஜப்பான் – இந்தியா இடையிலான உறவுகளை மேம்படுத்த இரு நாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்
ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபா் பைடனை பிரதமா் மோடி சந்தித்தார் இதுதொடா்பாக பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க அதிபா் பைடனை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சிகரமானது எனவும் உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் எப்போதும் ஒன்றிணைந்து பணியாற்றும் எனவும் தெரிவித்துள்ளார்…

















