ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தி… திவீர விசாரணையில் போலீஸ்…!
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி (51) என்பவர் தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 6 ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் அவசர அவசரமாக மதிய நேரத்திலேயே வீடு திரும்பி உள்ளார். கடந்த சில நாட்களவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாததால் தனது அறைக்கு சென்ற அவர் தற்கொலை செய்த அவர் தன்னுடைய மகள் மற்றும் மகனுக்கு தொலைபேசியில் இதுவே என்னுடைய இறுதி நாள் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இந்த தகவலை பார்த்த மகன் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொண்டு தனது தந்தையை பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி அவர்கள் சென்று பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விருகம்பாக்கம் போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவ்ய் செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான இவர் அதில் 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் பணத்தை இழந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”