வஞ்சரம் முதல் இறால் வரை..!! எகிறிய மீன் விலை..!! காசிமேட்டில் அலைமோதும் கூட்டம்..!!
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு இன்று அதிகாலை 4 மணி முதலே சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்க வந்துள்ளனர்.
கடந்த வாரம் புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால்., மீன் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக விற்று தீர்ந்தது என மீனாவர்கள் தெரிவித்தனர்..
இந்நிலையில் இன்றும் மீன் விற்பனை அதிகம் என சொல்லலாம்., இன்று அதிகாலை 4 மணி முதல் மீன் பிரியர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மீன்களை வாங்கி சென்று வருகின்றனர்..
மீன் விற்பனை விலை :
* ஒரு கிலோ வஞ்சிரம்- 800 ரூபாய்க்கும்,
* சங்கரா- 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும்
* வவ்வால்- 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும்
* கானங்கத்த கிலோ 300 ரூபாயில் இருந்து 450 ரூபாய்க்கும்
* பாறை கிலோ 600 ரூபாய்க்கும்
* ஷீலா கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..
* நெத்திலி கிலோ 150 ரூபாய்க்கும்
* இறால்- 300 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும்
* ஒரு கிலோ நண்டு- 300 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும்
* கடம்பா கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தை விட இந்த வராம் மீன் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளதோ அதேபோல் மீனின் விலையும் அதிகமாக இருப்பதாக மீன் பிரியர்கள் தெரிவித்துள்ளனர்..
















