உத்தரபிரதேசத்தில் தடம் புரண்ட சரக்கு இரயில்..!! மீட்பு பணிகள் தீவிரம்..!!
உத்தரபிரதேசம் மதுரா அருகே சரக்கு இரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது…
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.. இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இந்த பெட்டிகளில் இருந்த 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா பிருந்தாவன் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு இரயில் பிருந்தாவன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இந்த விபத்தில்
குறிபிட்ட 15 பெட்டிகள் மட்டும் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் டெல்லியை நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக சென்ற 15 இரயில்கள் நிறுத்தப்பட்டது., இதனால் உத்தரபிரதேசம் டெல்லி இரயில் சேவைகள் பாதிப்புகுள்ளானது. இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்து வந்த இரயில்வே ஊழியர்கள் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், நேற்று மாலை பீகாரின் நாராயண்பூரில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.