சென்னையில இலவச மோர் தரங்களா..? எங்கப்பா..?
சென்னை மண்ணடியில் உருது பள்ளியில் வகுப்பறைகளை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த நீர் மோர் வழங்கும் திட்டத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நாளை தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஜூன் அல்லது ஜூலையில் பழனியின் முருக பகதர்கள் மாநாட்டை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.