முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவின் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு 8:01 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

திரவுபதி முர்மு :
அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மறைந்த தலைவர் மன்மோகன் சிங் உடலிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி :
அதேபோல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/12/Picsart_24-12-27_13-05-02-028-750x375.jpg)
















