மச்சினியுடன் கள்ளத்தொடர்பு.. கடைசியில் அவரது மகளிடமே அத்துமீறிய கேவலம்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசித்து வருபவர் முகமது அன்சார்.33 வயதாகும் ஆட்டோ டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் இவருக்கும் மனைவியின் சொந்த சகோதரியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கும் திருமணமாகி 10வயதில் பெண் குழந்தை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்காதல் மோகத்தால் முகமது அன்சார் தனியாக வீடு எடுத்து அந்த பெண்ணுடன் குடும்பம்
நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண் வீட்டில் இல்லாத போது அவரது 10-வயது பெண் குழந்தையான சிறுமியை முகமது அன்சார் மிரட்டி கடந்த சில மாதமாக தொடர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி கூறியும் அவர் கண்டு கொள்ளாததால் கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் இருந்து வெளியேறி பக்கத்து தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி பாட்டியிடம் சொல்லி அழுதுள்ளார்.
இதனையடுத்து பாட்டி அந்த சிறுமியை அழைத்து கொண்டு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து புகாரளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு முகமது அன்சார் மீது 12-வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்தது கொலை மிரட்டல் விடுத்தது போக்சோ உள்ளிட்ட 5-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இரவு குடிபோதையில் இருந்த முகமது அன்சார் பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்து செல்ல முயன்றுள்ளார்.
இதனால் அதிர்சியடைந்த சிறுமியின் பாட்டி சத்தம் போடவே அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்ததோடு தப்ப முயன்ற முகமது அன்சாரை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த முகமது அன்சார் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தகவல் அறிந்து வந்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவனை கைது செய்தனர்.
மேலும் படுகாயமடைந்த அவனை சிகிச்சைக்காக போலீஸ் காவலுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்