கள்ளக்காதல் விவகாரம்.. மாமியாரை கொலை செய்த மருமகள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை கிராமத்தில் வசித்து வந்தவர் அலமேலு. இவருடைய மகனுக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் பவித்ராவிற்கு அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்ற 18 வயது கல்லூரி மாணவனுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு போக போக கள்ளக்காதலாக மாறியதை அடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.
இதனை அறிந்த மாமியார் அலமேலு இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் இந்த விஷயத்தை அலமேலு வெளியே சொல்லிவிடுவாறோ என எண்ணி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.மேலும் அலமேலுவை தீ வைத்தும் எரித்துள்ளனர்.
பின்னர் பவித்ராவின் கணவர் அளித்த புகாரின் பேரில் சப்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டன் மற்றும் பவித்ரா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள்.
-பவானி கார்த்திக்