- “கோதாவரி இதை படிக்காம போறவங்களுக்கு..” நெட் – கட் ஆயிடும் சொல்லு டி..!
கடந்த 1986ஆம் ஆண்டு இயக்குநர் விசு இயக்கி நடித்திருந்த திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இவருடன் இணைந்து ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் , மனோரமா, கமலா கமேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். குடும்படமாக உருவன இப்படத்திற்கு மக்களிடம் சிறந்த அங்கிகாரம் பெற்றது. குறிப்பாக விசுவின் டைலாக்குகள் இன்றைக்கும் பேசபடுபவையாக உள்ளது.
இளைய தலைமுறையினர் இன்றைக்குப் பார்த்தாலும் மிகுந்த சுவாரஸ்யமான அனுபவத்தையும் பாடத்தையும் தரக்கூடிய திரைப்படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’.
முதல் விருது:
மத்திய அரசின் தங்கத் தாமரை விருதை வென்று தமிழ் சினிமாவுலகிற்கே பெருமை சேர்த்தது. ஏனெனில் தமிழில் முதன்முறையாக தங்கத் தாமரை விருது ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்திற்கே கிடைத்தது.
விசு-மனோரமா:
சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் காமெடி காட்சிகள் இல்லையென்ற காரணத்தால் மனோரமாவின் பாத்திரம் இணைக்கப்பட்டதாக, விசு பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அப்படி சேர்க்காமல் போயிருந்தால் ‘கண்ணம்மா… கம்முன்னு கெட‘ என்ற வசனம் பலருக்கும் தெரியாமல் போயிருக்கும்.
பாடல்கள்:
பொதுவாக விசுவின் படங்களில் பாடல்கள் சுமாராகத்தான் அமையும். விதிவிலக்காக, இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்தன. சங்கர் – கணேஷ் கூட்டணி அருமையான பாடல்களை உருவாக்கியிருந்தார்கள். கூடுதல் சிறப்பம்சமாக, வைரமுத்துவின் வரிகள் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தன. ‘தாய்ப்பாலுக்குக் கணக்குப் போட்டா தாலி மிஞ்சுமா’ என்பது போன்ற வரிகள் பெற்றோர்களின் தியாகத்தை பாட்டின் மூலம் சிறப்பாக உணர்த்தின.
பிள்ளைகளை அறிமுகபடுத்தும் விதம்:
சம்சாரம் அது மின்சாரம் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களான தனது வாரிசுகளை அழகாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்துவார் விசு.
இவ என் பொண்ணு. பேரு சரோஜினி. கவிக்குயில் சரோஜினி நாயுடு பேரை வைச்சிருக்கேன். இது சிதம்பரம். வ.உ.சி, நினைவா வைச்சிருக்கேன். ரெண்டாவது பையன் சிவா. சுப்ரமணிய சிவாவை ஞாபகப்படுத்துற விதமா வைச்சிருக்கேன். இதான் என் மூணாவது பையன் பாரதி. இவனுக்கு அந்த மகாகவியோட ஏண்டா வைச்சோம்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கேன்…
என்ற வசனங்கள் எல்லாம் விசுவால் மட்டுமே பேச முடியும்.
“கோதாவரி வீட்டுக்கு நடுவே கோட்டை கிழி டி…”
அப்படினு கமலா கமேஷ் அவர்களை பார்த்து சொல்லும் வசனம் சூப்பர் என சொல்லலாம்..
அதை விட ரகுவரன் அவர்களிடம் பேசும் இந்த வசனம் அல்டிமேட் என்றே சொல்லலாம்..
விசு : நீ ட்ரெயின் ல அடிபட்டு சாக கிடந்த அப்போ 3 பாட்டில் ரத்தம் கொடுத்து காப்பாத்திய அம்மையப்ப முதலியாரை உனக்கு தெரியல.. இந்த வசனம் மறக்க முடியாத வசனம் என சொல்லலாம்..
இப்படி குடும்பக் காவியம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ”சம்சாரம் அது மின்சாரம்” திரைப்படம் நம் பார்வைக்கு வந்து இன்றுடன் 38வருடங்கள் ஆகியுள்ளன.
-பவானி கார்த்திக்