தாய்ப்பால் அதிகரிக்க தேவையான உணவுகள்..! குறிப்பு -1
குழந்தைகளுக்கு முதல் ஆறுமாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் மட்டும் தான்.., உண்மையான ஆரோக்கியம் உள்ளது. அப்படி ஆரோக்கியமாக கொடுக்கப்படும் தாய்ப்பால் இன்னும் அதிகமாக சுரக்க இந்த வகையான உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
வெந்தயம் : வெந்தயத்தை பாலில் சேர்த்து.., நன்கு காய்ச்சி சர்க்கரை கலந்து பாயசம் போல் குடித்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். வெந்தயத்தை சாதம் வடித்த கஞ்சியில் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க, தாய்ப்பால் அதிகம் சுரக்கம்.
பேரிச்சம் பழம் : பேரீச்சம்பழத்தை குழந்தை கருவில் இருக்கும் பொழுதில் இருந்தே சாப்பிட்டு வரலாம்.., இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். குழந்தை பிறந்த பின்னும் சாப்பிடுவதால் தாய்ப்பால் அதிகம் சுரப்பதோடு. உடலுக்கு தேவையான ரத்த உற்பத்திக்கு உதவும்.
வெற்றிலை : வெற்றிலையை நெருப்பில் காட்டி .., 2 நிமிடம் மார்பில் வைத்து எடுத்து விட வேண்டும். இதனால் தாய்ப்பாலும் சுரக்கும். தாய்ப்பால் கட்டி இருந்தால் சரியாகிவிடும்.
அருகம் புல் சாறு : அருகம் பால் சாற்றில் தேனை கலந்து.., குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிப்பதோடு, ரத்த சோகை நோயையும் குணப்படுத்தும்.
ட்ரை புரூட்ஸ் : பாலூட்டும் தாய்மார்கள் தினமும் காலை முந்திரி, வால்நட், அல்லது ஊற வைத்த பாதம் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து, உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் கால்சியத்தை கொடுக்கிறது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post