எகிறிய மீன் விலை…!! காசிமேட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்…!!
புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் காசிமேடு மீன் சந்தையில் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக மக்கள் மீன் வாங்கி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம் அந்த வகையில் கடந்த மாதம் புரட்டாசி என்பதால் பலரும் விரதம் இருந்து வந்த நிலையில் மீன் விற்பனை சற்று குறைந்தது.. நேற்று ஐப்பசி மாதம் தொடங்கியதையொட்டி
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு இன்று அதிகாலை 4 மணி முதலே சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்க வந்துள்ளனர். அதேசமயம் இன்று காலை சாரல் மழை பெய்ததால் மழையில் நனைந்த படியே மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்..
ஒரு கிலோ வஞ்சிரம்- 950 ரூபாய்க்கும்,
சங்கரா- 500 ரூபாயில் இருந்து 550 ரூபாய்க்கும்
இறால்- 450 ரூபாயில் இருந்து 550 ரூபாய்க்கும்
ஒரு கிலோ நண்டு- 300 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும்
வவ்வால்- 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும்
கானங்கத்த கிலோ 250 ரூபாய்க்கும்
பாறை கிலோ 400 ரூபாய்க்கும்
நெத்திலி கிலோ 150 ரூபாய்க்கும்
கடம்பா கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக சூறைக்காற்றுடன் வீசக்கூடிய கனமழை பெய்ததால் மீனவர்களால் கடலுக்கு செல்ல முடியாத சூழல் உருவானதால்.. இனி வரும் நாட்களில் மீன்விலை குறைந்து காணப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..