அரூர் அருகே இடி இறங்கி கோழி பண்ணை தீப்பிடித்ததில் ஐந்தாயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 50-கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிட்லிங் ஊராட்சியில் உள்ள மலை தாங்கி கிராமத்தில் இன்று விடிய காலை இடி இறங்கி கோழிப்பண்ணை தீயில் சுமார் 5000 கோழிகள் பலி
சிட்லிங் ஊராட்சி மலை சார்ந்த பகுதியாகும் இப்பகுதியில்நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில். இன்று விடிய காலை சுமார் மூன்று மணி அளவில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இடி இடிந்ததில் மலை தாங்கி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி இறங்கி தீ பிடித்தது.
தென்னை மரம் அருகே உள்ள கோழி பண்ணையில் மின்சார ஒயர் தீ பிடித்து கோழி பண்ணை கொட்டாய் முழுவதும் தீ பற்றி எறிந்தது. பண்ணையில்இருந்த சுமார் 5000 கோழிகள் தீயில் கருகி இறந்தன.
உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள்தீயை அணைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அரூர் வட்டாட்சியர் பெருமாள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் கோட்டப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தருமபுரி: சிட்லிங் பள்ளத்தாக்கு பகுதியில், மலைத்தாங்கி கிராமத்தில் இன்று அதிகாலை மின்னல் தாக்கி கோழிப் பண்ணை எரிந்ததில் 6500 கோழிகள் உயிரிழப்பு. pic.twitter.com/tU4dDTuIlP
— AIR News Chennai (@airnews_Chennai) March 25, 2023
Discussion about this post