மெரினா கடற்கரை மண்ணில் புதைத்து இருந்த கற்சிலை கண்டு பிடித்து மெரினா போலீசார் சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிலை கடத்தல் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் மண்ணில் புதைந்து இருந்த ஒரு அடி உயரம் உள்ள கற்சிலையை மீனவ மக்கள் கண்டெடுத்தனர். பின்னர் மெரினா போலீசார்க்கு மீனவ மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெரினா போலீசாரிடம் மீனவ மக்கள் கற்சிலையை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மெரினா கடற்கரை போலீசார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மெரினா கடற்கரை இடத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கற்சிலை எத்தனை ஆண்டு பழமையானது என்றும் எப்படி கடற்கரை மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் யார் இந்த கற்சிலையை புதைத்து வைத்துள்ளனர் எதற்காக புதைக்கப்பட்டது என்றும் தீவிர விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.