தீபாவளி என்றாலே புதுத்துணி,பட்டாசு, இனிப்பு எவ்ளோ பிரபலமோ அந்த அளவுக்கு தீபாவளிக்கு வெளியேறும் புதுப்படமும் முக்கியத்துவம் பெரும். பொதுவாக தீபாவளிக்கு முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய்,அஜித், சூர்யா,போன்றவர்களின் படம் வருவது தான் இயல்பு அனால் இந்த முறை அவர்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்தாலும் பொழுதுபோக்குக்கு சற்றும் பஞ்சமில்லாத இருநட்சத்திரங்களின் படங்கள் வருகின்றது.
சினிமாத்துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய சிவகார்த்திகேயனின் பிரின்ஸும், வித்யாசமான கதைக்களத்தை தேர்வுசெய்து அதில் வெற்றியும்பெறும் கார்த்தியின் சர்தார் படங்களும் வெளியாகிறது.
இருபடங்களின் டீசரும் சமீபத்தில் வெளியாகி ஆர்வத்தை கூடியுள்ளன. பி.ஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த படங்களிலே அதிக பொருட்செலவில் தயாரிக்கபட்ட படம் சர்தார்.மறுபக்கம் அவருக்கே உரியகளமான காமெடியை மையமாககொண்டு தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிய பிரின்ஸும் ரசிகர்களிடையே ஆர்வத்தை கூட்டியுள்ளது.
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடித்து அனைவரின் பாராட்டுகளை பெற்று நல்ல மொமெண்ட்டமில் இருக்கும் கார்த்தி, டாக்டர்,டான் என்று அடுத்து அடுத்து 100 கோடி படங்களை கொடுத்து பீக் பார்மில் இருக்கும் சிவகார்த்திகேயனும், ஒரேநேரத்தில் கார்த்தி vs சிவா என்று வந்தால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு சினிமாத்துரையினர் மற்றும் ரசிகர்களிடம் அதிகமாகதெரிகிறது. மேலும் இருவருக்கும் சமளவு மார்க்கெட் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆனாலும் சில ரசிகர்கள் இரண்டு படத்தின் ட்ரைலர்களை பார்த்து `சர்தாரை பார்த்தால் அடுத்த கோப்ரா போல் தோணுகிறது’ என்றும் ‘சிவா எப்போதுமே ஒரே மாதிரி படம் தான் பண்ணுகிறார்’ என்றும் கருத்து கூறி வருகின்றனர். எது எப்படி பார்த்தாலும் பொன்னியின்செல்வனும் இந்த படங்களுக்கு போட்டியா இருக்கும் என்றும் சிலர் கூறிவருகின்றனர். சர்தார்,ப்ரின்ஸ் படங்கள் ரசிகர்களை திருப்திபடுத்த தவறினால் பொன்னியின்செல்வனுக்கு குடும்ப ரசிகர்கள் மீண்டும் செல்ல தயாராகத்தான் இருப்பார்கள்.அதே போல் தீபாவளி ரிலீசான சர்தார்,பிரின்ஸ் படங்கள் ரசிகர்களை கவர்ந்ததால் பொன்னியின்செல்வன் போட்டியிலிருந்து வெளியேறவும் வாய்ப்பு இருக்கு.