ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோவிலில் திருவிழா..! சோகத்தில் முடிந்த சம்பவம்..!
தாம்பரம், பழைய ஜிஎஸ்டி சாலையில், இரும்புலியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் 28ம் ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற்றது.
திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்த நிலையில் முன்னாள் கவுன்சிலரும், தாம்பரம் மாநகர அதிமுக பொருளாளருமான மாணிக்கம், அவரது மனைவி தனலட்சுமியுடன் தீமிதித்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக மாணிக்கம், தனலட்சுமி, அன்பழகன் ஆகிய 3 பேர் அக்னி குண்டத்தில் தவுறி விழுந்தனர்.
இதனை கண்ட அருகில் இருந்தவர்கள், மற்றும் கோயில் நிர்வாகிகள், 3 பேரையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு, 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனை அறிந்த போலீசார் தீவிபத்து குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பக்தர்கள், பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்