பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை… போரட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மருத்துவர்கள்..
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் “ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்” கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து தலை., கை கால்களில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். பின் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த “சஞ்சய் ராய்” என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
சிபிஐ விசாரணை:
மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மாநில காவல்துறையினரிடம் சிபிஐக்கு மாற்ற வேண்டுமென உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கொல்கத்தா போலீசிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார்.
வேலை நிறுத்த போரட்டத்தில் மருத்துவர்கள்:
கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதிகேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நோயாளிகளுக்கு பாதிப்பு இன்றி மருத்துவர்கள் போராடுமாறு தமிழக மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்