அமலாபால் போஸ்ட் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!!
சிந்து சமவெளி படத்திலிருந்து ஆடை படம் வரை அமலாபாலின் படத்தில் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை. சில ஆண்டுகளாக படவாய்ப்பு இல்லாமல் இருந்த அமலாபால் தற்போது வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் மறுபடியும் பார்முக்குள் வந்துள்ளார்.
சினிமாவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே விஜய், தனுஷ், அரவிந்தசாமி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
பின் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்தார்.
விவாகரத்திற்கு பின் நடிப்பில் ஆர்வம் காட்டிய அமலாபாலுக்கு ஆரம்பத்தில் படவாய்ப்பு சரிவர அமையாததால் மன அழுத்தத்திற்கு ஆளானார்.
பின் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு பார்ட்டி என வரம்பு மீறி தனது பெயரை கெடுத்து கொன்றார். தொடர்ந்து கேடாவர் படத்தில் நடித்த அமலாபால் அந்த படம் ஓடிடியில் வெளியாகி பாராட்டை பெற்றது.
பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை மையமாக கொண்ட கதையில் மலையாளத்தில் “ஆடு ஜீவிதம்” என்ற படத்தில் பிரித்விராஜ்க்கு மனைவியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் லிப் லாக் கட்சியில் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நிர்வாணமாகவே நடித்துவிட்டேன் இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல என கூலாக பதில் அளித்து இருந்தார்.
தனுஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள D-50 படத்தில் அமலாபால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிருகிறது.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது என கூறப்படுகிறது. D50 படப்பிடிப்பு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களாக இணையத்தளத்தில் ஆக்டிவாக இல்லாத அமலாபால், மீண்டும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் போஸ்ட் செய்துள்ளார்.
அதில் சிவப்பு நிற உடையில், தலைவிரிகோலமாக இருக்கும் அமலாபாலை பார்த்து ரசிகர்கள் தலைவி ரிட்டர்ன்ஸ் என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-கெளசல்யா