அதிபுருஷ் படத்திற்கு குவியும் ரசிகர்கள்..!! வைரலாகும் அனுமன் காட்சி..!
இயக்குனர் ஓம்.ராவத் இயக்கத்தில், டீ சீரிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைபடம் தான், “ஆதிபுருஷ்”. இன்று உலகளவில் வெளியாகி இருக்கும் இத் திரைப்படம், ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இன்று உலகெங்கும் ஆதிபுருஷ் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதிலும் அதிபுருஷ் வேடத்தில் இருக்கும் அனுமன் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த அனுமன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் “தேவ் தத்தா நாகே”, மராத்தி சீரியலில் நடித்து வந்த இவருக்கு அப்போதே அதிக ரசிகர்கள் கூட்டம் இருந்துள்ளது.
இருப்பினும் நடிப்பின் அதிக ஆர்வம் இருந்ததால்.., சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை கொண்ட இவர், ஹிந்தியில் சிறுசிறு வேடத்தில் நடத்தியுள்ளார். அதன் மூலம் தற்போது இவருக்கு ஆதிபுருஷ் படத்தில் அனுமன் கதாபாத்திரத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ராமர் வேடத்தில் இருக்கும் பிரபாஸிற்கு அனுமனாக தேவ் நடித்துள்ளார்.., தற்போது தேவின் அனுமன் புகைப்படம் தான் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது..