குறையும் தங்கம் வெள்ளி விலை..!! உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!!
ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.., அதன் படி கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 44,040 ரூபாய் ஆகவும். கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 5,505 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைக்கப்பட்டு 36,072 ரூபாய் ஆகவும். கிராமுக்கு 37 ரூபாய் குறைக்கப்பட்டு 4509 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைக்கப்பட்டு 77.50காசுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 77,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post