ஆடியோவால் சிக்கிய போலி சிங்கம்..!! உண்மை உடைத்த மதன் ரவிச்சந்திரன்..!! இத்தனை பெண்கள் வாழ்க்கை..?
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. வருகின்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக மட்டும் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது என சொல்லலாம். காரணம் நேற்று பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பணம் சிக்கியதை தொடர்ந்து தற்போது ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அண்ணாமலை இருக்கிறாரே அவர் ஆடியோக்களால் சிக்கும் போலி சிங்கம்.., என மதன் ரவிச்சந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து பேசியுள்ளார். மேலும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களையும் பேசியுள்ளார்.
பாஜக தமிழக செயலாளர் கே.டி.ராகவன் மீதான பாலியல் வீடியோ விவகாரத்தை யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டு இருந்தார். அதனால் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜாக நிர்வாகிகள் பதவி நீக்கம் :
அதனை தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது விசாரணை நடத்தப்பட்டது.. ஆனால் பாஜகாவால் மதனுக்கும், வெண்பாவுக்கும் பாதுகாப்பு இருக்காது என எண்ணிய அவர். குற்றம் செய்தவர்கள் தான் அவரது குற்றத்திற்கு தண்டனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக தலைவர்களின் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க மலர்கொடி தலைமையிலான ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து பாஜகவில் உறுப்பினராக இருந்த மதன் ரவிச்சந்திரனும், வெண்பாவும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
மதன் டையரி என்கிற யூடியூப் சேனல் முடக்கப்பட்டது. தற்போது மதன், பாஜக தலைவர் அண்ணாமலை பற்றிய தகவல்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில், ‘’பல பெண்களின் வாழ்க்கைக்கு அண்ணாமலை காரணமாக இருக்கப்போகிறார். கே.டி.ராகவனின் வீடியோவை அண்ணாமலை தான் வெளியிடச் சொன்னார். ஆனால் வீடியோ வெளியான பின் கமிட்டி அமைக்கச் சொல்லி வெண்பாவிடம் தேன் கேட்டார். வெண்பா தான் மலர்கொடி கமிசன் அமைக்க ஐடியா கொடுத்தார். அப்போது, வெண்பாவிவிடம் சகோதரி நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். முகத்தை எங்கும் காட்டிக்கொள்ள வேண்டாம். கொஞ்ச நாள் வரைக்கும் அப்படித்தான் இருக்கும்.
எல்லாம் அவங்கள பதவியில இருந்து தூக்கிர வரைக்கும் தான், மதன தூக்கிட்டு எல்லாம் சரியாகிடும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.., அண்ணாமலை மாதிரி ஒரு நம்பிக்கை துரோகி, அவனுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் நம்மை மொத்தமாக அழித்து விடுவான். அது மட்டும் இல்லை, இவனை மாதிரி மனிதர்கள் வாழவே கூடாது.
இதனால் எத்தனை பெண்கள் இந்த வீடியோவால் பாதிக்கப்படுவார்கள். என அவன் புரிந்துகொள்ளவில்லை.
ஒரு கமிட்டியை வைத்து நாலு சுவற்றுக்குள் வைத்து செய்யப்படும் விஷயங்களை வீடியோவை எடுத்து வெளியிடுங்கள் எனக் சொல்லுகிறார். எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறது.. இதுபோன்ற வீடியோக்கள் வெளியானல் என்ன ஆகும் என நான் கேட்டேன், ஆனால் அண்ணாமலை போகட்டும் விட்டுவிடுங்கள் என சொல்றான்.
இப்படி பேசி வழியனுப்பி வைத்த ஒருத்தன் 12 மணி நேரத்தில் மாற்றி அறிக்கை வெளியிடுகிறான் என்றால் இவனை எல்லாம் எப்படி நம்புவது.?’’எனக்கூறும் மதன், இடையிடையே அண்ணாமலையுடன் பேசிய ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார். கே.டி.ராகவன் வீடியோவை வெளியிடச் சொன்னதே இந்த அண்ணாமலைதான்’’ என மதன் குற்றம்சாட்டியுள்ளார்.