இந்திய ஜெயின் சிலை தமிழகத்தில் இருந்து கடத்திச் சென்று அமெரிக்காவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த நபரை சிறையில் இருந்து வெளியே விட்டு விட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல்
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்திய தமிழக ஜெயின் சிலைகளை அமெரிக்கா நாட்டுக்கு கடத்தி சென்று
1000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளதாகவும் , தற்போது குற்றம்சாட்டப்பட்ட நபர் தற்போது வரை சிறையில் தான் உள்ளனர் என்றும் மறுபடியும் வெளியே வந்தால் அந்த நபர் ஏதேனும் நாட்டுக்கு எப்படியாவது தப்பி சென்று விடுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து இந்த ஜெயின் சிலை அமெரிக்காவில் தான் தற்போது வரை உள்ளதாகவும் இந்த தகவலை தெரிவித்த நபரே அங்குள்ள நாட்டின் புலனாய்வு துறை போலீசார் தான் தகவலை தெரிவித்தார் எனவும் இந்து அறநிலையத்துறை தரப்பில் ஜெயின் சிலை குறித்தும் விசாரிக்க முழு அதிகாரம் உள்ளதாகவும் , ஜெயின் சிலை கடத்தல் விவகாரம் குறித்து இதுவரை தகவல்களை தெரிவித்த தனக்கு இந்த ஒரு பரிசுகளும் அரசு தரப்பில் கொடுத்து விட வேண்டாம் எனவும் தனக்கான சம்பளம் பாக்கியே நான் இன்னும் கூட பெறாமலும் இருப்பதாகவும் தற்போது வரை இலவசமாகவே கடவுளுக்காக இப்பணி செய்து வருவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பு தெரிவித்தார்