“எல்லார்க்கும் எல்லாம்” திமுக அரசின் அசத்தல் செயல்..!!
இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக ஆயிரமாவது கும்பாபிஷேகம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று கும்பாபிஷேக விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்த இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருவதாக பதிவிட்டுள்ளார்.
"எல்லார்க்கும் எல்லாம்" என்ற #DravidianModel ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக @tnhrcedept-இன் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.
5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.
இன்றைய… https://t.co/MkinIdLe2O
— M.K.Stalin (@mkstalin) September 10, 2023
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக செயல்படுவதாகவும், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதற்குக் காரணமான அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Discussion about this post