“சொர்கமே என்றாலும் அது நம்ப ஊரை போல வருமா..” 6 லட்சம் பேர் பயணம்…!!
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 5 ஆயிரத்து 736 சிறப்பு பேருந்துகளும், தமிழ்நாடு முழுவதிலும் 44 ஆயிரத்து 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவித்திருந்தது. தற்போது பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.