டெல்லியில் கூடும் அவசர கூட்டம்; பரபரப்பில் தமிழ்நாடு..!! கர்நாடக அரசு சொன்னது என்ன..?
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் நாளை நடைப்பெறவுள்ள நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு நாடிய நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில் 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
கர்நாடக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவேரி மேலாண்மை வாரியம் ஆலோசனை கூட்டத்தில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க வலியுறுத்தபோவதாக தெரிவித்தார்.
பேட்டி (அமைச்சர் துரைமுருகன்)
இது தொடர்பாக பேசிய கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..