பொன்னேரி அருகே மின்சார ரயில் தடம் புரண்டது..!!
பொன்னேரி ரயில் நிலையம் அருகே, தண்டவாளம் மற்றும் மின்சாரம் பராமரிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. அந்த பிரிவில் மின்பாதை ரயில்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பிரத்யேக இரயில் ஒன்று உள்ளது.
இந்த இரயில் நேற்று இரவு பராமரிப்பு பணிக்காக பொன்னேரியில் இருந்து எண்ணூர் வரை சென்றுள்ளது. பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு இன்று காலை 4:10 மணியளவில் மீண்டும் பொன்னேரி நோக்கி வந்துள்ளது.
ரயில் நிலையம் அருகே இருக்கும் லூப் லைன் மாறும் பொழுது, ரயிலின் பின் பக்கம் உள்ள சக்கரம் தாண்டவளாத்தை விட்டு தரை இறங்கி தடம் புறண்டுள்ளது. அது பயணிகள் ரயில் இல்லை என்பதால், விபத்து எதுவும் ஏற்படவில்லை.
அந்த பாதையில் வரும் மற்ற எலெக்ட்ரிக் ரயில் களுக்கும், தகவல் கொடுக்கப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு அங்கு வந்த ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஜாக்கி உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை நிறுத்திவைக்கப் பட்டது. நேற்று சென்னை பேசின் ப்ரிட்ஜ் அருகே எலெக்ட்ரிக் ரயில் தடம் புறண்டுள்ளது, இன்று காலை பொன்னேரியில் இந்த சம்பவம் நிகழ்ந்து பயணிகளிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post