மழை இல்லாதததால் ஏற்பட்ட விளைவு..!! கண்ணீர் வடிக்கும் விவாசாயிகள்..!!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மழை இல்லாததால் நிலக்கடலை விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கிராமப்புற பகுதியில் நிலக்கடலை பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மழை இல்லாத காரணத்தால் கருகிப்போன நிலக்கடலை அடுத்த ஆண்டுக்கு பயிர் இடுவதற்கு விதைக்கடலையாக கூட கிடைக்காது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, நிலக்கடலை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post