பிளஸ் 2 பொது தேர்வு மொழிப்பாட தேர்வு எழுதாத விவகாரம் குறித்த இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக, பா ம க சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஒவ்வொரு பள்ளிகளும் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணை தேர்வின் அவசியத்தை விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஒரு வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாணவர்களின் விவரப்பட்டியல் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு, கண்காணிக்கப்பட்டு தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
மூன்று வாரத்தில் 9 நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாவட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் கண்காணிக்கப்படும். நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்கள் சமுதாய பொருளாதாரம் கண்டறியப்பட்டு முன்னேற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post