எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வது அவர் பதவிக்கு அழகல்ல…!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…!!
ஈரோட்டில் முடிவுற்ற நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள், புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 50 ஆயிரத்து 88 பேருக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் 951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பில் முடிவுற்ற 559 திட்ட பணிகளை துவங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து 133 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் வரவுள்ள இருநூற்று 22 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்னார். மொத்தம் ஆயிரத்து 369 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர் ஆளுங்கட்சியை விமர்சிக்கலாம் தவறு கிடையாது. ஆனால் நியாமான புகார்களை சொல்லலாம். தி.மு.க., ஆட்சி மீது குற்றம்சாட்ட ஏதும் கிடைக்காமல் பொய் சொல்லக் கூடாது என விமர்ச்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டதாக பழனிசாமி பொய் சொல்லுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சாத்தனூர் அணையை திறக்கும் முன்பு 5 முறை முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது என்றும் சாத்தனூர் அணையை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை எந்த முன்னறிவிப்பின்றி திறந்ததால் 200-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கி இறந்தனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். .
மேலும் ஒன்றிய அரசின் நிதிக்காக காத்திராமல் வெள்ள நிவாரண மீட்பு பணிகளை நாங்களே செய்து முடித்தோம் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..