பா.ம.க. தலைவர் அன்புமணியை ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்புமணி என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்; அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. ஊடகங்களில் மட்டுமே அன்புமணி கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார். டெல்லியில் கூட்டணியில் இருக்கிறோம்; தமிழ்நாட்டில் எந்த அணியிலும் இல்லை என அன்புமணி பேசியதற்கு எடப்பாடி பதிலடி கொடுத்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடப்பெற மாட்டோம் என்று அன்புமணி சூசகமாக தெரிவித்த நிலையில் எடப்பாடி காட்டமாக பேட்டியளித்தார்.
Discussion about this post