இ-வர்த்தக சேவை…!! இனி ஈஸியா ஆன்லைனில்…!!
மகளிர் பொருளாதார சுய சார்பு பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சுய உதவிக்குழுக்களின் முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தினார். கிராமப்புறங்களில் செயல்படும் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை நகர்ப்புறப் பகுதிகளில் விற்பனை செய்திடும் வகையில் மாவட்டத் தலை நகரங்களில் வளாகங்கள் அமைத்து, அவற்றுக்கு பூமாலை வணிக வளாகங்கள் என பெயர் சூட்டி, அவ்வளாகங்களில் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்திடச் செய்து, சுய உதவிக்குழுக்களின் பொருளாதர வளர்ச்சிக்குவித் திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வண்ணம், மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சிகள், வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனைக் கண்காட்சிகள், கல்லூரிச் சந்தைகள் போன்றவை நடத்திட ஆணையிட்டு, அக்கண்காட்சிகளை துவக்கி வைத்தும், கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டும் சுயஉதவிக்குழுக்களுக்கு ஊக்கமளித்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார்.
தமிழக துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையின் கீழ் மதிசந்தை விற்பனை இணையதளம், இயற்கை அங்காடி அடுக்குமாடி விற்பனை சந்தை போன்ற முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை உட்பட்ட மாவட்டங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் இ-வர்த்தக சேவை முகாம் நடைப்பெற்றது. இம்முகாமில் Amazon, Flipkart, Meesho, India Mart, Gio Mart, Boom மற்றும் GeM போன்ற வர்த்தகதளங்களின் மூலம் 24 இலட்சத்து 48ஆயிரம் உற்பத்திப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
மற்றும் இணையதளம் வாயிலாக விற்பனையை அதிகரிப்பதற்காக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
திராவிடமாடல் ஆட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் அவர்களின் தலைமையில் சாதனைகள் பல படைத்து வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..