முகத்தை அழகாக வைக்கும் பாலாடை மாஸ்க்..!!
சில பெண்களின் சருமம் என்றும் மென்மையாக இருக்கும். மேலும் சருமத்தை அழகாக வைக்க வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே.., செய்திடலாம். கடந்த சில தினங்களாக அழகு குறிப்புகள் பற்றி பார்த்து வருகிறோம். அதில் இன்று நாம் காண இருப்பது, “பாலாடை”.
பாலாடை பயன் படுத்தும் பொழுது இன்னும் பொலிவுடன் வைக்கும். பாலாடை பயன் படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள இறந்த ரத்த செல்களை நீக்கி .., புதிய செல்களை உருவாக்குகிறது.
பாலாடை மாஸ்க் தயார் செய்யும் முறைகள் :
* 1 டீஸ்பூன் பாலாடை, மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி ஒரு 10 நிமிடம் முகத்தில் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* 2 டீஸ்பூன் பாலாடையுடன், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, ஒன்றாக கலக்கி 20நிமிடம் முகத்தில் பூசவும், பின் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
* 1 டீஸ்பூன் பாலாடையுடன், 1 டிஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும், பின் 15 நிமிடங்கள் முகத்தில் ஊற வைக்க வேண்டும். பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை, வாரத்திற்கு 2 முறை செய்தால் முகம் பொலிவுடன் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post