கொடைக்கானலில் இரண்டாம் நாள் மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி நேற்று தமிழக அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு மற்றும் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இருந்தது . தொடர்ந்து இரண்டாம் நாள் மலக்கு கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று நடைபெற்று வருகிறது . தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து பூங்காவில் அலங்கரிக்கப்பட்ட மலர் உருவங்கள் மற்றும் பூக்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் . சுற்றுலாப் பயணிகள் மலர்களால் வடிவமைக்கப்பட்ட கரடி உருவம் மற்றும் ஒட்டகச்சிவிங்கி காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட காட்டெருமை டோரா பொம்மை உருவங்களை கண்டு புகைப்படம் எடுத்து செல்கின்றனர். மேலும் தொடர் விடுமுறை இருந்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது .
Discussion about this post