பிரபலங்கள், மூத்த திரைத்துறையினரின் அடுத்தடுத்த திடீர் உயிரிழப்புக்கள் சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வருடம் பிறந்து 3 மாதங்கள் கூட முழுவதுமாக முடியவில்லை. அதற்குள் வரிசையாக சில எதிர்பாராத மரணங்கள், திரையுலக பிரபலங்களையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள் மற்றொரு திரைப்பலம் மரணமடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து தயாரிப்பாளராக தன்னை உயர்த்திக் கொண்டவர் , சி.என்.ஜெயக்குமார்.இவர் உடல்நல குறைவு காரணமாக, உயிரிழந்தார்.
பாரதிராஜா இயக்கத்தில், சுகன்யா அறிமுகமான ” புது நெல்லு புது நாத்து ” படத்தின் மூலமாக தயாரிப்பாளரான சி.என்.ஜெய்குமார் உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். அவரது உடல் செனாய் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சி.என்.ஜெய்குமார் உடலுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பாரதிராஜாவின் மகன் மனோஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
" புது நெல்லு புது நாத்து " படத்தின் தயாரிப்பாளர் திரு.சி.என்.ஜெய்குமார் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு இன்று இயக்குனர் திரு. பாரதிராஜா புதிய நீதிக்கட்சி தலைவர் திரு. ஏ.சி.சண்முகம்,தயாரிப்பாளர் கலைப்புலி திரு. தாணு ,தயாரிப்பாளர்கள் திரு.சித்ராலட்சுமணன், pic.twitter.com/rvOqUbkbb6
— Touring Talkies (@ToouringTalkies) March 16, 2023