கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி நீடித்து வந்த நிலையில், இன்று இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக விலை கணிசமான அளவு குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (மே 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 5,670 ரூபாயாகவும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 45,360 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 6,150 ரூபாயாகவும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 49,200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 60 காசுகள் குறைந்து 78 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவிற்கு 600 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
டாலரின் மதிப்பு அதிகரித்ததால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தில் இருந்து டாலர் மீது திரும்பியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது.
Discussion about this post