தனியார் கல்லூரியில் போதைப் பொருள்.. காவல்துறை அதிரடி.. வழக்கின் தற்போதைய நிலவரம்..!
போதைப் பொருள் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும், இந்த போதைப் பொருள் புழக்கத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில், காவல்துறையினர் சார்பில், அதிரடி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், இரண்டரை கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் வரை, கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்நிலையில் மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த மூன்று வட மாநிலத்தவர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 11 மாணவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 11 கல்லூரி மாணவர்களையும் அவர்களின் சொந்த பிணையில் விடுவித்தார். மேலும், கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநிலத்தைச் சார்ந்த மகேஷ்குமார் (29), சுனில்குமார் (29), டப்லு (23) ஆகிய மூன்று பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
-பவானி கார்த்திக்