அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து அயப்பாக்கம் செல்லக்கூடிய அரசு பேருந்தில் அதிகப்படியான மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணித்ததால் பேருந்து பாதியில் நிறுத்திய ஓட்டுனர். அம்பத்தூர் வானகரம் சார்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல்.
சென்னையின் புறநகர் பகுதியான அயப்பாக்கம் பகுதிக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது குறிப்பாக காலை மாலை என இரு வேலையிலும் பேருந்தில் அதிகப்படியான பயணிகள் பயணிப்பதால். பேருந்துகள் நிரம்பி வழிகிறது குறிப்பாக மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணிப்பதால் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துவதால் பேரன்பு ஓட்டுநர்கள் வாகனத்தை பாதி வழியிலே நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்லும்படி அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பேச்சைக் கேட்காமல் மாணவர்கள் தொங்கியபடி பயணிப்பதால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் ஏற்படுத்தும் வகையில் பேருந்தின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டில் தொங்கும்படி செல்கின்றனர் இதனால் பெரும் பரபரப்பு.அயப்பாக்கம் பகுதியில் பேருந்து ஓரம் கட்டி நிறுத்திய ஓட்டுனர் மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தியும் கேட்காததால் ஐ சி எஃப் காலனி அருகே பேருந்து நிறுத்திவிட்டு மாணவர்களை கீழே இறங்கிச் செல்லுமாறும் காவல்துறைக்கு தகவல் கொடுப்பதாக கூறிய நிலையில் அதையும் பொறுப்பெடுத்தாமல் மாணவர்கள் மீண்டும் பேருந்தில் தொங்கியபடி பயணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post