மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவு..!! கி.வீரமணி இரங்கல்..!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கள் தெரிவித்துள்ளார்., இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. #மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு வீர வணக்கம்
நாடாளுமன்றத்தின் போது வாழ்நாள் போராளியான கொள்கை வீரர், அருமைத் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதாக அமைந்திருக்கிறது. அவர்கள் சென்னையிலே படித்தவர். பலநேரங்களில் நம்முடன் தமிழில் உரையாடியவர். கொள்கைப் பயணத்திலே ஒன்றாகப் பயணித்தவர்.
அப்படிப்பட்ட ஓர் அரிய மாவீரர் மறைந்தார் என்பதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயற்கையின் கோணல் புத்தி என்று தந்தை பெரியார் சொல்லுவார். அப்படிப்பட்ட உணர்வுகள். அதுவும் ஜனநாயகம் முட்டுச்சந்திலே மாட்டிக் கொண்டிருக்கக் கூடிய இந்த காலகட்டத்திலே, அதை எதிர்த்துப் போர்த் தளபதிகளில் ஒருவராக போர்க்களத்திலே களமாடினார். அப்படிப்பட்ட ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு! என்றாலும் எதிர்கொள்வோம்.