அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை…!! உற்சாகத்தில் மக்கள்..!!
சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றது. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோகதிற்காக பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
இதனால் கேஸ் விலை குறித்த அறிவிப்பைப் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் கடந்த மாதம் மகளிர் தினத்தன்று பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் விலை குறைந்திருப்பதாக தெரிவித்தார்.
அதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர இருந்ததால் கேஸ் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என அறிக்கைவெளியானது.
இந்நிலையில் 19 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் கடந்த மாதம் 1960 ரூபாயில் இருந்து 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை தலா 100 ரூபாய் குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த அறிக்கைகள் தற்போது இறுதி செய்யப்பட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை 818 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேஸ் விலை குறைந்திருப்பதால் இல்லத்தரசிகள் மட்டுமின்றி ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..