ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் மாறுபடுகிறதா..? காரணம் இது தான்..!
சில பெண்களுக்கு மாதவிடாய் சீராக இருக்கும் ஒன்று இரண்டு நாட்கள் தள்ளி போகும். ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களுக்கு முன்னே வரும், ஐந்து நாட்களுக்கு மேலும் மாதவிடாய் தொடரும். இதற்கான தீர்வு என்னவென்று தெரியாமல் திகைக்கும் பெண்களுக்காக.., தான் இந்த குறிப்பு.
13 வயதில் இருந்து 14 வயதிற்குள் ஒரு பெண் பருவம் அடைகிறாள் என்றால், கட்டாயம் அந்த பெண்ணுக்கு ரத்த போக்கு குறைவாக இருக்கும். அதுவே நாளடைவில் ப்ளீடிங் அளவு அதிகரிக்கும், மாதவிடாய் 7-8 நாட்கள் வரை தொடரும்.
பீரியட்ஸ் 3-4 நாட்கள் வரை இருந்தால் மட்டுமே அது நார்மல். அதற்கு மேல் ப்ரீயட்ஸ் ஏற்பட்டால். கட்டாயம் பெண் மருத்துவரை பார்த்து ஆலோசிக்க வேண்டும்.
40 வயதிற்கு மேற் பட்டவர்களுக்கு 3 நாட்களுக்கு மேல் ப்ரீயட்ஸ் இருக்காது, அப்படி அதற்கு மேல் இருந்தாலும் அது நார்மல் தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கு நின்று விடும்.
மாதவிடாய் ஆனது 28 நாட்களுக்கு பின் வரும் அல்லது 35 நாட்களுக்கு பின் வரும் இவை இரண்டுமே சாதாரணம். எனவே மாதவிடாய் நாள் தள்ளி போனாலும் கவலை வேண்டாம், சரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிக ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ள கூடாது. இந்த மன அழுத்தம் மனதை மட்டுமல்லாது உடலையும் அதிகம் பாதிக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அளவை அதிகரிப்பதால் ப்ரீயட்ஸ் முன்னதாகவே வர காரணமாகிறது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
– வெ. லோகேஸ்வரி.
Discussion about this post