பாதத்தை மென்மையாக்க வேண்டுமா..? இதை ட்ரை பண்ணுங்க
நம் உடலில் உள்ள பாகங்களில் என்றும் அழகாக இருப்பது முகம் என்றால், எப்பொழுது மென்மையின்றி காணப்படும் பாகம், பாதம் தான். எப்பொழுது பாத வெடிப்பு, வீக்கம், குதிகால், என இருக்கும் அதை மென்மையாக மாற்றுவது எப்படி..? உங்களுக்காக சில டிப்ஸ்
ஒரு டீஸ்பூன் பூந்திக்கொட்டை பவுடர், ரோஜா இதழ், 200 மில்லி பால் சேர்த்து கொதிக்க வைத்து, வெது வெதுப்பான நீரின் மேல் வைக்க வேண்டும்.

பின்னர் 15 நிமிடங்கள் அந்த தண்ணீரில் காலை வைத்திருக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் பாதங்களை கழுவ வேண்டும்.
அதன் பின் தேங்காய் எண்ணெய் கொண்டு பாதத்தை மசாஜ் செய்ய வேண்டும்.
ஒரு ஸ்பூன் காபி தூள், 2 ஸ்பூன் பாதம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், 1/2 ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு எலும்பிச்சை பழம் சாறு சேர்த்து, ஒன்றாக கலந்து பாதத்தில் மசாஜ் செய்தவாறு தடவ வேண்டும் . அப்படி செய்தால் பாத வெடிப்பு நீங்கும்.

ஒரு பாத்திரத்தில் புளியை எடுத்து சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். 1/2 ஸ்பூன் வெல்லம், 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய், 1 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கால் முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் கால் வலி நீங்கும்.
மேலும் அழகு, ஆரோக்கியம், உணவு, குழந்தைகள் நலம், இதுபோன்ற தகவல்கள் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி