உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உறவை வைத்துக்கொள்ள ஆசையா..? அப்போ இந்த ரகசியம் கேளுங்க..!!
நம் உறவுகளை சிறந்த வழியில் வழி நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. உங்கள் துணையுடன் ஒன்றாக நேரம் செலவிடுவது, பெற்றோருடன் நேரம் செலவழிப்பது இப்படி நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சில சமயங்களில் கணவன் மனைவிகளுக்கிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், காதலி மற்றும் காதலன்களுக்கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் வாக்கு வாதங்கள் என ஏராளமான சவால்களை நாம் சமாளிக்க வேண்டியது உள்ளது.
ப்யூ ரிசர்ச் சென்டர் ஆய்வின்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று டேட்டிங் மற்றும் காதல் உறவுகள் கடினமாக இருப்பதாக அனைத்து அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் மக்கள் உறவுகளுக்கு நேரத்தை செலவழிக்காமல் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே உங்கள் ஆரோக்கியமான உறவை எந்நாளும் நீங்கள் பேண நினைத்தால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
உங்கள் உறவுக்கு என்று சரியான நேரத்தை ஒதுக்குங்கள் பள்ளி, வேலை மற்றும் குழந்தைகள் என தினசரி ஓடிக்கொண்டு இருக்கும் வாழ்க்கையில் உங்கள் உறவுக்கென்று சில நேரங்களை ஒதுக்குங்கள்.
நேரத்தை சமநிலையில் பராமரிப்பது மிகவும் அவசியம். உங்கள் ஆற்றலின் ஒரு பகுதியை உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் செலவழிப்பது நல்லது. உங்களுக்கு வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு போன்ற வேலைகள் அதிகமாக இருந்தால் அதற்கு பணியாட்களை நியமிப்பது நல்லது.
ஏனெனில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி அதை உங்கள் உறவுக்காக செயல்படுத்துவது மிகவும் அவசியம். உங்கள் உறவுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியம்.
உங்கள் தனிப்பட்ட நலன்களை பராமரித்தல் மிகவும் அவசியம் தம்பதிகளின் வாழ்க்கை பிண்ணிப் பிணைந்த ஒன்றாக இருந்தால் கூட ஒருவருக்கொருவர் தனிப்பட்ட நலன்களை கவனித்துக் கொள்வது அவசியம். உங்கள் தனிப்பட்ட நலன்களை நீங்கள் பராமரித்தால் அது உங்கள் சுய உணர்வை மேம்படுத்த உதவுகிறது.
எனவே உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பது, இசையை இசைப்பது, புத்தகம் படிப்பது, உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்வது போன்ற விஷயங்களை நீங்கள் செய்து வரலாம். உங்களுக்கு பிடித்த பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுங்கள். இது உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
சிறிய விஷயங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது பொதுவாக உங்கள் துணையின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் காதலர் தினம் போன்றவற்றிற்கு உங்கள் துணைக்கு நிறைய சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து அசத்திருப்பீர்கள்.
அது ஒருபக்கம் இருந்தால் கூட உங்கள் துணைக்கு அவ்வப்போது பரிசளிப்பதும் அவசியம். பரிசு என்றால் அவை பரிசுப் பொருட்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
அன்றாட விஷயங்களில் உங்கள் துணையை பாராட்டலாம், உங்கள் துணையின் சமையலை பாராட்டலாம், வீட்டிற்கு போகும் வழியில் பூக்கள் வாங்கிக் கொண்டு செல்வது, உங்கள் மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்து வரலாம்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் அவர் மேல் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவருக்கு காட்டுங்கள்.
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..