திருப்பதிக்கு லட்டு வாங்க போறிங்களா.? இதை தெரிஞ்சிகோங்க…!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்காண பக்தர்கள் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இதுவும் ஒன்று. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் இத்திருமலை அமைந்துள்ளதால் அங்கு வீற்றிருக்கும் பெருமாளை ஏழுமலையான் என்று பக்தர்கள் அழைத்து வருகின்றன.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் அதிக வருகையால் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகிவிடுகிறது. பின்னர் சாமி தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக திருக்கோவிலில் லட்டு வழங்கப்படுகிறது.
இந்த லட்டு இக்கோவிலுக்கே உரிய சிறப்பு. இந்த லட்டை பெறுவதற்கும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பெற்று செல்கின்றனர்.
இந்தநிலையில் லட்டு வாங்கும் பக்தர்கள் கட்டாயம் இதை கொண்டு வந்தால் தான் லட்டு கிடைக்கும் என்று அறிவிப்பு ஒன்றை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதாவது சாமி தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு லட்டு வழக்கம் போல் வழங்கப்படும் என்றுன் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் வாங்க வரும் பக்தர்கள் ஆதார் அட்டை கொண்டுவரவேண்டும். மேலும் ஆதார் அடிப்படையில் ஒரு ஆதார் அட்டைக்கு கூடுதலாக இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
-பவானி கார்த்திக்