மாங்கல்ய வரம் தரும் மாங்காடு அம்மன்.. வரலாறு தெரியுமா உங்களுக்கு..?
மாங்காட்டில் இருக்க கூடிய அம்மன் வேறு யாரும் இல்லை மாங்காடு அம்மன் சொல்ல கூடிய காமாட்சி அம்மன் .
பார்வதிதேவி, ஈசனை திருமணம் செய்துக் கொள்வதற்காக ஒற்றைக்காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் தான் “மாங்காடு”. பார்வதி தேவி இங்கு மேற்கொண்ட கடுமையான தவத்தின் மூலம் ஈசன் மனம் இரங்கினார்,
அதன் பின் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரராக காமாட்சியை மணந்து கொண்டார்,. என்பது வரலாறு. காஞ்சிபுரத்தில் காஞ்சிகாமாட்சி அம்மனுக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கின்றதோ, அதே அளவிற்கு இங்கு மாங்குடி காமாட்சி அம்மனுக்கும் சிறப்பு உண்டு.
இத்திருத்தலத்திற்கு சென்றால் அர்தமுள்ள “அர்த்தமேருஸ்ரீசக்கரம்” காணலாம்.., அக்கினியின் மேல் ஏறிநின்று…, ஈசனை நினைத்து கொண்டு இருக்கும் அம்மனை காண முடியும். இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அம்பாளை நான்கு வடிவில் தரிசிக்க முடியும்.
ஸ்ரீ சக்கர வடிவில் அம்பாள், பஞ்சலோகத்தாலான காமாட்சியம்மன், அக்கினியில் தவம் செய்யும் காமாட்சி அம்மன், காமாட்சி அம்மனுக்கு அருகில் அணையாமல் ஜோதி வடிவில் எரிந்துகொண்டிருக்கும் காமாட்சி அம்மன் விளக்கு.
கோவில் திருத்தலம் உருவான விதம் :-
உலகம் செயல்பட்டு கொண்டு இருப்பது, ஈசனின் பார்வையில் என சொல்லுவார்கள் , அப்படி இருக்கும் நிலையில் சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக மூடி விடுவார். அப்பொழுது சூரியனும், சந்திரனும், வராமல் உலகம் இருண்டு விடும். கோவமடைந்த சிவ பெருமான் பார்வதி தேவியை பூலோகத்திற்கு அனுப்பி மனித பிறவி எடுத்து மீண்டும் என்னை வந்து சேர வேண்டும் என்ற சாபத்தை அளிப்பார்.
ஈசனின் சாபத்திற்கு இணங்க தேவியும் மாமரங்கள் நிறைந்த மாங்காட்டினை தேர்வு செய்து, நெருப்பின் மீது கடும் தவம் புரிந்து ஈசனின் கோவத்தை தனித்து, மீண்டும் ஈசனை மனமுடிபார், எனவே தான் இந்த திருத்தலத்திற்கு மாங்காடு காமாட்சி என பெயர் சூட்டப்பட்டது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post