மதசார்பற்ற நாடு என்று 10 ஆண்டுகளில் மாறும்.அதற்கான போராட்டம் இன்று தொடங்கியுள்ளது- ஆ. ராசா
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து திக,திமுக , விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசியதாவது:
உதயநிதி பேச்சு இந்தியா முழுக்க விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. சனாதனத்திற்கு எதிராக ஊர் சுற்றும் மோடி எப்படி சனாதனத்திற்கு ஆதரவாக பேச முடியும்??? டெல்லியில் சனாதனம் பற்றி பேசும் சங்கராச்சாரியார் குருக்கள் என 1 கோடி பேரை அமர வையுங்கள். உடன் மோடி அமித்சாவையும் அமர வையுங்கள். இந்த ராசா தனி ஆளாக பெரியார் அம்பேத்கர் புத்தகங்களுடன் வருகிறேன். ஆங்கிலத்தில் தான் பேசுவேன், எனக்கு ஹிந்தி தெரியாது. சனாதனத்தை பற்றி பேசலாம் சவால். தேதியை நீங்களே முடிவு செய்யுங்கள்.
மதசார்பற்ற நாடு என்று 10 ஆண்டுகளில் மாறும்… அதற்கான போராட்டம் இன்று தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.
Discussion about this post