தீபாவளி சிறப்பு போக்குவரத்து இயக்கம்..!! ஒரே நாளில் முன் பதிவான டிக்கெட்கள்..!! அச்சத்தில் பயணிகள்..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு 17,000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நாளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது..
வருடம் தோறும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.. அப்படியாக இந்த மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவகிறது..
அதனை தொடர்ந்து அடுத்த நவம்பர் 1, 2, 3 என 4 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் லட்சம் கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பலரும் திட்டமிட்டு இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது
அதற்கான டிக்கெட் முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது.. நேற்று இரயில் முன்பதிவுகள் தொடங்கிய நிலையில் இரயில் டிக்கெட்கள் அனைத்தும் ஒரே நாளில் முன்பதிவாகியுள்ளது.. இரயில் முன்பதிவுகள் முடிந்த நிலையில் தற்போது பேருந்து முன்பதிவை மக்கள் நம்பி இருப்பதாக தெரிகிறது..
அதேபோல் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கிய நிலையில்., கடந்த இரண்டு நாளில் மட்டும் 72 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. அதற்கு காரணம் ஆம்னி பேருந்துகள் பண்டிகை காலங்களில் தங்களுடைய பேருந்து கட்டணங்களின் விலையை உயர்த்துவது தான்.. எனவே ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளிலேயே மக்கள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த மாதம் 29ம் தேதி சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து 21,000 பேரும், 30ம் தேதி 23,500 பேரும் பயணம் செய்ய டிக்கெட்கள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.. பொதுமக்களின் பயணத்தை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 17,000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.. எனவே சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது..
இந்த நாளில் டிக்கெட் விலைகளை உயர்த்தக்கூடாது., பயணிகள் பாதுகாப்பு., கூடுதல் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பின்னரே அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..