மயிலாடுதுறையில் 108 ஆம்புலன்ஸ் ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் வேலை நிறுத்தம்…
மயிலாடுதுறையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் அதற்கான ஆயத்த கூட்டத்தை நடத்தினர்.
மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதில், கலந்துகொண்ட மாநில தலைவர் வரதராஜ், மாநில பொதுச்செயலர் ராஜேந்திரன் ஆகியோர் ஜனவரி 8ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து விளக்கி பேசினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.